தமிழ்நாடு

கடும் பனி மூட்டம்: 12 விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

DIN

சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் செவ்வாய்க்கிழமை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே அதிகப் பனி காணப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு பனி இறங்கியதால், பெரும்பாலான வாகனங்களில் முகப்பு விளக்கு போட்டபடியே வாகனம் ஓட்டினர்.
சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை முற்றிலும் மறையும் அளவுக்கு கடும் பனி நிலவியது. இதனால் சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகள் விமானம் பெங்களூருக்கும், மும்பையில் இருந்து வந்த விமானம் ஐதராபாத்துக்கும் திருப்பி விடப்பட்டன.
சார்ஜா, இலங்கை, திருவனந்தபுரம், புனே உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 8 விமானங்கள் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு புறப்படத் தயாராக இருந்த 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் சற்று தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT