மேட்டூர் அணை நீர்மட்டம் 71.70 அடி
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 71.70 அடியாக இருந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 71.70 அடியாக இருந்தது.
அணைக்கு நொடிக்கு 149 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 7 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 34.17 டி.எம்.சி.யாக இருந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.