முதல்வர் டிசம்பர் 30 இல் வருகை: மஞ்சூர் எல்லைப் பகுதியில் கூடுதல் போலீஸார் குவிப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு நீலகிரிக்கு டிசம்பர் 30 இல் தமிழக முதல்வர் வருவதை ஒட்டி மஞ்சூர் பகுதியிலுள்ள தமிழக -கேரள எல்லை ப்பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடுமுதல்வர் டிசம்பர் 30 இல் வருகை: மஞ்சூர் எல்லைப் பகுதியில் கூடுதல் போலீஸார் குவிப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு நீலகிரிக்கு டிசம்பர் 30 இல் தமிழக முதல்வர் வருவதை ஒட்டி மஞ்சூர் பகுதியிலுள்ள தமிழக -கேரள எல்லை ப்பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு நீலகிரிக்கு டிசம்பர் 30 இல் தமிழக முதல்வர் வருவதை ஒட்டி மஞ்சூர் பகுதியிலுள்ள தமிழக -கேரள எல்லை ப்பகுதிகளில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் டிசம் பர் 30ஆம் தேதி எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக நக்சல் தடுப்புப் பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மஞ்சூர் அருகே தமிழக - கேரள எல்லைப் பகுதிகளான கிண்ணக்கொரை, கெத்தை, முள்ளி, இரியசீகை, கோரகுந்தா, அப்பர்பவானி, நெடுகல்கம்பை உள்ளிட்ட பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
மேலும், முள்ளிகூர், மேல் முள்ளிகூர், புதூர், தனியகண்டி, கோரகுந்தா, மூப்பர்காடு, நெடுகல் கம்பை, வீரக்கம்பை, பெள்ளத்திக்கம்பை, தும்பனேரிக்கம்பை உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின கிராமங்களிலும் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.