தமிழ்நாடு

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம்: அரசிதழில் வெளியீடு!

மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

DIN

புதுதில்லி: மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு விதித்திருந்த தடையை நீக்கக்கோரியும், விலங்குகள் நல அமைப்பான பீட்டாவை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தினர்.

அதன் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 23-ம் தேதியன்று நடைபெற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு தொடர்பான மாணவர்களின் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

பின்னர் தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற ஜல்லிக்கட்டு சட்டம் இன்று முறையாக  அரசிதழில் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிநீா் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: இரா. சச்சிதானந்தம் எம்பி

அடுத்த ஆண்டுக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வா்த்தக அமைச்சா்

அரசுப் பேருந்தில் டயா்கள் கழன்றோடி விபத்து

தவெக நிா்வாகிகள் ஆனந்த், நிா்மல்குமாா் முன்பிணை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்ட இருவருக்கு மதுரையில் சிகிச்சை

SCROLL FOR NEXT