முகப்பு
தமிழ்நாடு

சசிகலா புஷ்பாவின் புகார்: அதிமுகவிடம் விளக்கம் கேட்குது தேர்தல் ஆணையம்! 

அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற சசிகலா புஷ்பாவின் புகாருக்கு விளக்கமளிக்குமாறு அதிமுகவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On : 4 பிப்ரவரி, 2017 at 4:57 PM
பகிர்:

புதுதில்லி: அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற சசிகலா புஷ்பாவின் புகாருக்கு விளக்கமளிக்குமாறு அதிமுகவை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொது செயலலாளராக சசிகலா நடராசன் தேர்தெடுக்கப்பட்டார். அவரது நியமனம் சரியான முறையில் நடைபெறவில்லை என்றும், ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கோரி, அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.

அவரது இந்த புகாருக்குத்தான் விளக்கமளிக்குமாறு அதிமுகவை தேர்தல் ஆணையம் தற்போது கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இது தேர்தல்  ஆணையத்தின் 'நோட்டீஸ்; இல்லை என்பதால் இதற்கு காலக்கெடு எதுவும் விதிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.