தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கான காரணம் என்ன?: ப.சிதம்பரம் விளக்கம்

DIN

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக அண்மையில் நடைபெற்ற போராட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் அண்மையில் எழுச்சி மிகுந்த போராட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே திரண்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. வேலைவாய்ப்பின்மை உள்பட நாட்டில் ஏற்பட்டுள்ள பல விஷயங்களின் மீதான கோபத்தை அந்தப் போராட்டத்தில் பார்க்க முடிந்தது.
ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
ஆனால், 2015-16-ஆம் ஆண்டில் 1.5 லட்சம், 2016-17-ஆம் நிதியாண்டில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் வரை 77,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் அரசுத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் 50 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இதுவே, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கான காரணமாக இருக்கலாம் என விளக்கம் அளித்துள்ளார் சிதம்பரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT