தமிழ்நாடு

நாளை பாலமேடு ஜல்லிக்கட்டு: 850 காளைகள், 1607 மாடுபிடி வீரர்கள் தயார்

DIN

மதுரை மாவட்டம் பாலமேட்டில் வியாழக்கிழமை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவில், 850 காளைகளும் 1607 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.
பாலமேட்டில் வாடிவாசல் முன் பார்வையாளர்கள் அமரும் மாடம் அமைக்கும் பணி, இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் செவ்வாய்க்கிழமை இறுதிக் கட்டத்தை எட்டின. இதற்கிடையே மாடுபிடி வீரர்களுக்கான முன் பதிவு பாலமேடு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் 1670 வீரர்கள் பெயர்களைப் பதிவு செய்தனர்.
இவர்களில் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, 1607 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வயது, எடை, உடற்தகுதி குறைபாடு காரணமாக, 66 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
பாலமேடு கால்நடை மருத்துவமனையில் காளைகள் பதிவு நடைபெற்றது. இதில், 850 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிக்கான விழா ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT