முகப்பு
தமிழ்நாடு

ஆளுநருடன் சந்திப்பு: 5 மணிக்கு ஓபிஎஸ்; 7.30க்கு சசிகலா!

இன்று மதியம் சென்னை வரவுள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதல்வர்  பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அடுத்தடுத்து சந்திக்க உள்ளனர்.

Updated On : 9 பிப்ரவரி, 2017 at 2:31 PM
பகிர்:

சென்னை: இன்று மதியம் சென்னை வரவுள்ள தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழக முதல்வர்  பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா அடுத்தடுத்து சந்திக்க உள்ளனர்.

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் மூன்று மணிக்கு சென்னை வர இருக்கிறார்.

அவரை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்  இன்று மாலை ஐந்து மணிக்கு சந்திக்கிறார் என்றும், அவருக்கு அடுத்தபடியாகஅதிமுஅகப்பொதுச்செயலாளர் சசிகலா இன்று இரவு 7.30 மணிக்கு சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அடுத்தடுத்து நடக்க உள்ள இந்த சந்திப்புகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.