தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

DIN

முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு அதிமுகவினரும், பொதுமக்களும் அதிகளவில் தினமும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோரை ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை சந்தித்தபோது, பாதுகாப்பு குறித்தும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வீட்டுக்கு வெள்ளிக்கிழமை கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வீட்டின் நுழைவாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கூடுதல் வசதிகளும்...: கட்சியினர், பத்திரிகையாளர்கள் நிற்பதற்கு வசதியாக பந்தல் போட்டு தனித்தனி இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆதரவு தெரிவிக்க வருவோர் வந்து செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டிருந்தது.
இதுதவிர, பேட்டியை பார்ப்பதற்கு வசதியாக 3 இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒலிபெருக்கி வசதியும் ஏற்படுத்தப்பட்டு, "சசிகலாவை ஏன் எதிர்க்கிறோம்' என்று அதிமுக தொண்டர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். குடிநீர், உணவு வசதிகளும் செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT