தமிழ்நாடு

சட்டப்பேரவை உறுப்பினர்களை மீட்கக் கோரி ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல்: காவல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

சட்ட விரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களை (எம்எல்ஏ) மீட்டுத் தரக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்களுக்கு பதிலளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ. ஆர்.டி.ராமசந்திரன், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக பெண் எம்எல்ஏ. எம்.கீதாவை ஆகியோரை மீட்டு நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என, குன்னம் தொகுதி வாக்காளர் எம்.ஆர்.இளவரசன் மற்றும் வி.ப்ரீத்தா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர்.
"அதிமுக எம்எல்ஏக்கள் சட்டவிரோதமாக, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உள்ள ஒரு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை அவர்களது குடும்பத்தினர் கூட பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும், சுதந்திரமாக நடமாடும் அடிப்படை உரிமையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது' என மனுவில் இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சி.டி.செல்வம், டி.மதிவாணன் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எம்.ஆர்.இளவரசன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கே.பாலு, "தாங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 20 எம்எல்ஏக்கள், உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., கூவாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை திங்கள்கிழமைக்கு (பிப்.13) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
முன்னதாக ஆஜரான அரசு வழக்குரைஞர், இந்த விவகாரம் தொடர்பாக அரசு கூடுதல் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை கூறிய தகவல் தவறானது எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT