தமிழ்நாடு

ஆட்சி அமைக்க காலம் தாழ்த்துவது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்: தொல்.திருமாவளவன்

DIN

கடலூர்: ஆட்சி அமைக்க ஆளுநர் காலம் தாழ்த்துவது குதிரை பேரத்திற்கு வழிவகுக்குமென தொல்.திருமாவளவன் கூறினார்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழலுக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் கூடுதல் பொறுப்புடன் கூடிய ஆளுநரை நியமித்ததே முக்கிய காரணம். கடந்த 6 மாதமாக ஆளுநர் நியமிக்கப்படாமல் பொறுப்பு ஆளுநரே தமிழகத்தை கவனித்து வருகிறார்.

நிரந்தர ஆளுநர் இருந்திருந்தால் அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைத்திருக்கும். சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் தனித்தனி வாக்கெடுப்பு நடத்தாமல் மொத்தமாக அவர்களின் பெரும்பான்மை தெரிவித்தாலே போதுமானது. ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் ஆட்சி அமைப்பது தொடர்பாக குதிரை பேரம் நடத்துவற்கு வாய்ப்பு உள்ளது.

தற்போதைய அரசியல் சூழலால் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணப்பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த முடியாமல் பணிகள் அனைத்தும் தாமதமாக நடந்து வருகிறது. மார்ச் 10-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் அரசியல் பிரச்னைகளால் குழம்பி போய் உள்ளனர்.

அரியலூரில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நந்தினியின் வயிற்றில் சிசு உள்ளதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழக்கை இரட்டை கொலை வழக்காக பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை கால நீட்டிப்பின்றி  ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுதந்திரப் போராட்டப் பொருள்களை நன்கொடையாக அளிக்க வேண்டுகோள்

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

முன்னாள் காங்கிரஸ் நிா்வாகி, ஹிந்தி நடிகா் பாஜகவில் இணைந்தனா்

கோப்பு மகா மாரியம்மன் கோயில் திருவிழா

அரசுப் பேருந்து மோதி கோயில் பூசாரி உயிரிழப்பு

SCROLL FOR NEXT