தமிழ்நாடு

உள்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை: விஜயகாந்த்

DIN

உள்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகள் நாள்தோறும் இறக்கின்றனர். இதுகுறித்து யாரும் பேசுவதில்லை. விவசாயிகளுக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பு இல்லை. நாள்தோறும் விவசாயிகள் இறப்பது தொடர்பாக யாருமே அறிக்கையோ, நிவாரணமோ கொடுக்கவில்லை. நான் எப்போதும் மக்கள் பிரச்னை குறித்து மட்டுமே பேசுவேன். தமிழகத்தில் நிலையில்லாத ஆளுநர், நிலையில்லாத உள்ளாட்சி, நிலையில்லாத முதல்வர் என்ற நிலை உள்ளது என்றார் விஜயகாந்த்.
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வரும் என நினைக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இல்லை. வருமா என்பது தெரியவில்லை. உள்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்றும், நாள்தோறும் அரசியல் சூழல் மாறி மாறி வருகிறதே என்ற கேள்விக்கு ஏதாவது ஒன்று வரட்டும். இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான் என்றார் விஜயகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT