முகப்பு
தமிழ்நாடு

ரகசிய வாக்கெடுப்பு நடக்குமா? ஆளுநர் சொன்னது என்ன? 

இன்று நடைபோன்ற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய ஓட்டளிப்பு நடைபெறுமா என்பது குறித்து ஆளுநரின் பரிந்துரை சபாநாயகர் தனபாலுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:02 AM
பகிர்:

சென்னை: இன்று நடைபோன்ற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய ஓட்டளிப்பு நடைபெறுமா என்பது குறித்து ஆளுநரின் பரிந்துரை சபாநாயகர் தனபாலுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில் இன்னும் சற்று நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் சார்பிலும் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

இன்னும் சற்றுநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பபு தொடங்க உள்ள நிலையில் ரகசிய ஓட்டளிப்பு தொடர்பான எதிர்கட்சிகளின் மனுவானது ஆளுநரின் பரிந்துரையுடன் சபாநாயகர் தனபாலுக்குஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அவர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →