தமிழ்நாடு

கூடியது தமிழக சட்டப்பேரவை: உறுப்பினர்கள் கடும் அமளி; நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் முதல்வர்!

DIN

சென்னை: பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில்முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் கூடியுள்ள நிலையில் உறுப்பினர்கள் இடையே கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.அதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சபை கூடியதும் பன்னீர்செல்வத்தின் அணியினைச் சேர்ந்த கொறடாவான செம்மலையை பேச அனுமதிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் குரல் எழுப்பினார்.  அதனைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே யார் பேசுவது என்பதில் கடும் அமளி ஏற்பட்டது.

அத்துடன் ரகசிய வாக்கெடுப்பு கோரி திமுக உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.    

இந்த அமளிக்கு இடையே முதல்வர் பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT