தமிழ்நாடு

பேரவை பரபரப்புகள்...

DIN

தமிழக சட்டப்பேரவை சனிக்கிழமை (பிப்.18) காலை 11 மணிக்கு கூடியது. முன்னதாக அதிமுக, திமுக உறுப்பினர்கள் பேரவைக்குள் வந்தனர்.
காலை 10.44: மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் வந்தனர்.
காலை 10.50: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு சட்டப் பேரவை உறுப்பினர்கள் வந்தனர்.
காலை 10.52: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேரவைக்கு வந்தார்.
காலை 11: அவைத் தலைவர் பி.தனபால், பேரவைக்கு வந்து திருக்குறளைப் படித்து அவை நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார்.
காலை 11.07: செம்மலை உரிமைப் பிரச்னை கொண்டு வந்தார். இதைத்தொடர்ந்து, ரகசிய வாக்கெடுப்பு அல்லது வேறொரு நாள் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
நண்பகல் 12.01: பேரவைத் தலைவர் தனபாலுடன் திமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர்.
நண்பகல் 12:11: அமளிகளைத் தொடர்ந்து, சட்டப்பேரவை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 1: சட்டப்பேரவை மீண்டும் கூடியது.
மதியம் 1.13: கடும் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை பேரவையில் இருந்து வெளியேற்ற அவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டு அவையை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்தார்.
பிற்பகல் 3: சட்டப் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பிறகு, பேரவை மீண்டும் கூடியது.
பிற்பகல் 3.05: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
பிற்பகல் 3.21: வாக்கெடுப்பு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 122 வாக்குகளுடன் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT