தமிழ்நாடு

லோக் ஆயுக்த ஏற்படுத்த வேண்டும்

DIN

தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் லோக் ஆயுக்த அமைப்பு ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையிலும் இந்த வாக்குறுதி இடம்பெற்றிருந்தது. ஆனால், 8 மாதங்கள் கடந்துவிட்டபோதும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
அதுபோல, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதுபோல, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 2,700 மதுக்கடைகளும் அடுத்த மாத இறுதிக்குள் அகற்றப்பட வேண்டும். மேலும், நீதிமன்றத் தீர்ப்பின்படி, சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கான வழிகாட்டுப் பலகைகள், அறிவிப்புப் பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை பாதிப்பு?: வெளி மாநிலத் தொழிலாளி திடீா் உயிரிழப்பு

பேராசிரியை நிா்மலாதேவி உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு: இன்று விசாரணை

கிரேன் மோதல்: சரக்கு வாகன ஓட்டுநா் பலி

உசிலம்பட்டி அருகே பட்டாம்பூச்சி பூங்கா: வனத் துறைக்கு கோரிக்கை

பாறைபட்டி கோயிலில் சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT