தமிழ்நாடு

சிறுமி ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர்

DIN

சிறுமி ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரித்திகா (3). இவரது உடல் திருவொற்றியூர் குப்பைமேட்டில் காவல் துறையால் கண்டெடுக்கப்பட்டது.
அவரது உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளியை உடனடியாக தேடிக் கண்டுபிடித்து கைது செய்யவும், சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ரித்திகாவின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT