தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை

DIN

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
எண்ணூரில் படுகொலை செய்யப்பட்ட 3 வயது சிறுமி ரித்திகாவின் இல்லத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள். குறிப்பாக, பெண்களுக்கும் சிறுமிகளுக்கு இன்றைக்கு மிகப்பெரிய கொடுமைகள் நடந்து வருகின்றன.
5 திட்டங்களுக்கான கோப்புகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். பெண்களையும், சிறுமிகளையும் பாதுகாப்பதற்காக பல திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், பெண்களுக்கு எதிரான கொடுமை தொடர்கிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி ஈடுபட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT