தமிழ்நாடு

பருவநிலை மாற்றங்களுக்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: ரமணன் வலியுறுத்தல்

DIN

பருவநிலை மாற்றங்களை அறிந்து அதற்கேற்ப விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் வலியுறுத்தி உள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காலநிலை இடர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. உழவர் வயல்வெளிப்பள்ளி, வயல்தின விழா என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காலநிலை மாற்றங்கள் மற்றும் அதனை எதிர்கொள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
விவசாயிகள் வானிலை அறிக்கைகளை நன்கு கேட்டறிந்து அதன்மூலம் விவசாயத்தில் புதிய யுக்திகளை கையாண்டு விவசாயப் பணிகளை மேற்கொள்ளை வேண்டும். அவ்வாறு பருவநிலை மாற்றங்களை அறிந்து விவசாயம் செய்வதால் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT