தமிழ்நாடு

தடையை மீறி ஜல்லிக்கட்டு: கடலூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது! 

உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

DIN

கடலூர்: உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டாம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்க முடியாது என்றும் இன்று அறிவித்துள்ளது,.

இந்நிலையில் கடலூரில் உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. அவிழ்த்து விடப்பட்ட மாடுகளை வீரர்கள் அடக்கினார்.

இந்த போட்டிகளை ஏற்பாடு செய்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு மற்றும் மாவட்ட செயலாளர் சாமி ரவி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - மேஷம்

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அறிவிப்புகள்!

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை குறைவு!!

தொண்டர்களை உற்சாகப்படுத்தவே விஜய் அவ்வாறு பேசியுள்ளார்! - அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT