தமிழ்நாடு

மாணவ சமுதாயத்துக்கு தமிழினம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது

DIN

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ சமுதாயத்துக்கு தமிழினம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் செய்தியாளர்களுக்கு அவர் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
ஜல்லிக்கட்டு தடைக்கு காங்கிரஸ் கட்சியும் திமுகவுமே காரணம். காளைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கும்போது தடுக்கத் தவறியது இந்த இரு கட்சிகளும்தான்.
தமிழகத்தில் அதிமுக அரசுக்கு எந்த வகையில் கேடு விளைவிக்கலாம் என பலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்போடு பதில் சொல்கிறார். பிரதமர் சட்டபூர்வ நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். மாணவர்கள் போராட்டத்துக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியதில்லை. இது, அவர்களாக நடத்துகிற போராட்டம். இந்தப் போராட்டக் களத்தில் ஈடுபட்டிருக்கிற மாணவ சமுதாயத்துக்கு தமிழினம் நன்றிக் கடன்பட்டிருக்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT