தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு தடை நீங்கியது: முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி!

DIN

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது என்று முதல்வர் பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் பேட்டியளித்த பொழுது கூறியதாவது:

ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை தற்போது சட்டப்பூர்வமாக நீங்கி விட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டமே ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வுதான். எனவே யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த அவசர சட்டமானது ஆறு மாதத்திற்கு அமலிலிருக்கும்.  சட்ட முன்வரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றபப்டும். எனவே ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த சட்டம் கொண்டு வரப்பப்படுவதற்கு அறவழியில் நின்று போராடிய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT