தமிழ்நாடு

முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் பரஸ்பரம் வணக்கம்

DIN

சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 9.43 மணிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் வந்தனர்.
இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9.49 மணிக்கு வந்தார். அப்போது அவர் தனது இருக்கையில் அமர்வதற்கு முன்பாக, முதல்வர் இருக்கையில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு வணக்கம் தெரிவித்தார். இதைப் பார்த்த முதல்வர், மு.க.ஸ்டாலினுக்கு பதில் வணக்கம் தெரிவித்தார்.
காலை 10 மணிக்குத் தொடக்கம்: தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கி வைக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ், காலை 10 மணிக்கு வந்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. ஆளுநர் வித்யாசாகர் ராவ், காலை 10.01 மணிக்கு தனது உரையைத் தொடங்கினார். அவர் தனது உரையை முடித்த பிறகு, அவரின் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் வாசித்தார். இதன்பின், பேரவைக் கூட்டம் காலை 11.45 மணிக்கு நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT