தமிழ்நாடு

காரில் கடத்தி வரப்பட்ட இளம்பெண் தீயிட்டு எரிப்பு

பண்ருட்டி அடுத்த கனஞ்சாவடியில் தீ காயத்துடன் இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிகொண்டிருந்தார். அந்த வழியாக

சீனிவாசன்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கனஞ்சாவடியில் தீ காயத்துடன் இளம்பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிகொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து மருத்துவனைக்கு வந்த கடாம்புலியூர் போலீஸார், அந்த இளம்பெண்ணிடம் விசாரணை செய்ததில், சங்கராபுரத்தை சேர்ந்த செல்வி(25) என்பதும் அவர் சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தி வந்துள்ளது.

பின்னர், பண்ருட்டி அருகே வந்ததும் அவர் மீது டீசல் ஊற்றி கொளுத்தியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணை எந்த காரணத்திற்காக கடத்தினார்கள், முன்விரோதம் காரணமா, காதல் விவகாரமா, சொத்து விவகாரமாக உறவினர்கள் யாராவது கடத்தினார்களா என பல கோணங்களில் கடாம்புலியூர் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் உச்சம் தொட்ட வெள்ளி விலை!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்தியா..! ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பையில் 4-ஆவது பதக்கம்!

கல் நெஞ்சமல்ல பூ மஞ்சம்... டிம்பிள் ஹயாதி!

படையப்பா மறுவெளியீட்டு டிரைலர்!

அமைதிக்கான நோபல் வென்ற மச்சாடோ தலைமறைவு: விருதைப் பெற்ற மகள்! - என்ன நடந்தது?

SCROLL FOR NEXT