தமிழ்நாடு

போயஸ் தோட்ட இல்லம் எனக்கும், என் சகோதரிக்கும் மட்டுமே சொந்தம்: தீபக் விளக்கம்! 

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் போயஸ் தோட்ட இல்லம் எனக்கும், என் சகோதரி தீபாவுக்கும் மட்டுமே சொந்தம் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் விளக்கமளித்துள்ளார். 

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு செல்வதற்காக இன்று காலை அங்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள்  ஜெ.தீபாவிற்கு, உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியே தீபா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் செய்தி சேகரிக்க உள்ளே செல்ல செய்தியாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டதால் செய்தியாளர்கள் தரப்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆங்கில செய்தி சேனல் ஒன்றின் செய்தியாளரும் கடுமையாக அங்கிருந்த பாதுகாவலர்களால் தாக்கப்பட்டுள்ளார், அத்தோடு கேமரா, மைக் போன்ற உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 'எங்கள் அத்தையின் போயஸ் தோட்ட இல்லம் எனக்கும், என் சகோதரி தீபாவுக்கும் மட்டுமே சொந்தமாகும். போயஸ் தோட்ட இல்லத்திற்கு வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது. என் சகோதரி தீபாவை போயஸ் இல்லத்திற்கு வருமாறு நான்தான் அழைத்தேன் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள ஜெயலலிதாவின் படத்திற்கு தீபா மலர் மரியாதை செலுத்தினார். . தீபாவை யாரும் தடுக்கவில்லை' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT