முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.842 கோடிக்கு ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றம்: தெற்கு ரயில்வே

2016-2017-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.842 கோடிக்கு தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:44 PM
பகிர்:

2016-2017-ஆம் நிதியாண்டில் மட்டும் ரூ.842 கோடிக்கு தமிழகத்தில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் மூன்று ஆண்டு சாதனைகள் குறித்தும் தமிழகத்தில் தெற்கு ரயில்வே நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்தும் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
2016-2017-ஆம் நிதியாண்டில் புதிய தடங்கள் ரூ.63.31 கோடிக்கும், இரட்டைப் பாதை திட்டங்கள் ரூ.152.62 கோடிக்கும், அகலப்பாதைப் பணிக்கு ரூ.454.45 கோடியும், ரயில்வே மேம்பாலம் மற்றும் ரயில்வே சுரங்கப் பாலம் ரூ.172.37 கோடிக்கும் செலவிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிறைவு பெற்ற செயல் திட்டங்கள்: விழுப்புரம்-திண்டுக்கல் (273 கி.மீ.) இருவழிப்பாதை திட்டத்தின் பகுதியாக திண்டுக்கல் - தாமரைப்பாடி, அரியலூர் - மாத்தூர், விழுப்புரம் - திருவெண்ணெய் நல்லூர், மாத்தூர் - விருதாசலம் ஆகிய இரு வழிப்பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
செங்கோட்டை - புதிய ஆரியங்காவு இடையிலான 20 கி.மீ. வழித்தடம் அகலப்பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி-போத்தனூர் பிரிவில் ஒரு பகுதியாக பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையேயான அகலப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
பயணியர் தேவைகள்: தமிழகத்தில் பயணியர் வசதிகளை அமைப்பதற்காக 2016-2017- ஆம் ஆண்டில் ரூ.44.28 கோடி நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 122 ரயில் நிலையங்களில் கட்டண கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்பதிவுக்காக 1,000 மையங்களை உருவாக்குதல் எனும் திட்டத்தின் கீழ் செம்பனார் கோயில் தபால் நிலையத்தில் பயணச் சீட்டு முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், சிதம்பரம், விருதாசலம், திருவண்ணாமலை, நாகூர், சீர்காழி நிலையங்களில் 6 தானியங்கி பயணச் சீட்டு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், திருச்சி, கோவை ரயில் நிலையங்களில் மகளிர் உதவி மையங்களள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைமேடைகள்: மாம்பலம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிதாக இரண்டு பக்கங்களிலும் ஏறி இறங்குவதற்கான நடைமேடை வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடங்களில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிற்பதற்கு ஏதுவாக நடைமேடைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.
மேல்பாக்கம், ஆம்பூர், பச்சகுப்பம், விண்ணமங்கலம், ஜோலார்பேட்டை, வலத்தூர், வாணியம்பாடி, குடியாத்தம் ரயில் நிலையங்களில் விரைவு ரயில்களின் 24 பெட்டிகள் நிற்பதற்கு ஏதுவாக நடைமேடைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →