துணைவேந்தர் நியமனம் தொடர்பாக திருமாவளவன் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்!
காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளுக்ககான நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் ...
சென்னை: காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளுக்ககான நியமனத்தின் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கும் பொழுது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின பெண்களை நியமிப்பதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு இன்றுவிசாரணைக்கு வந்தது. அதனை விரித்த நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவிற்கு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பின்னர் இந்த வழக்கு ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.