அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 21ஆம் தேதி சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் வரும் 21ஆம் தேதி சசிகலா நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெ.ஜெ. டி.வி.க்கு அப்லிங்க் கருவிகளை வாடகைக்கு வாங்கியதில் அந்நியச் செலாவணி சட்ட விதிகளை மீறியதாக வி.கே.சசிகலா, அவரின் அக்காள் மகன் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறை கடந்த 1996-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை, எழும்பூர் முதலாவது பொருளாதாரக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சார்பில் அவரது வழக்குரைஞர்கள் ஆஜராகி, சசிகலா மீது தொடரப்பட்டுள்ள 4 அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளின் விசாரணையை விடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்புத் தெரிவித்து, சசிகலா விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவித்திருந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜாகீர்உசேன், சசிகலாவிடம் விடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்வதற்கு அனுமதி அளித்தார். இதனிடையே இன்று இதுதொடர்பான விசாரணையில் சசிகலா வரும் 21ஆம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துளளது.