தமிழ்நாடு

சேகர் ரெட்டியின் 50 கிலோ தங்கம் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்புள்ள 50 கிலோ தங்கத்தை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை முடக்கியது.

DIN

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.14 கோடி மதிப்புள்ள 50 கிலோ தங்கத்தை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை முடக்கியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள காந்தி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் கடந்த டிசம்பர் மாதம் 9 -ஆம் தேதி வருமான வரித் துறையினர் திடீர் சோதனை செய்தனர். அவரது கூட்டாளிகளான சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் பிரேம்குமார், சீனிவாசலு, ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் வீடுகளிலும், அலுவலகங்களிலும் இச்சோதனை நடைபெற்றது. சோதனையில் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.34 கோடி, 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், சேகர் ரெட்டிக்கு ரூ.100 கோடி அசையும், அசையா சொத்துகள் இருப்பதும் சோதனையில் தெரிய வந்தது.
மேலும், சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது முறைகேடான வழியில் பழைய ரூபாய் நோட்டுகளை புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றியது, விதிமுறைகளை மீறி பணபரிவர்த்தனையில் ஈடுபட்டது என சிபிஐயும், அமலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
50 கிலோ தங்கம் முடக்கம்: இதற்கிடையே, சேகர் ரெட்டியின் அலுவலகமான எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள 50 கிலோ தங்கத்தை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை முடக்கியது.
சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதில், ரூ.10 கோடி பழைய நோட்டுகள், ரூ.34 கோடி புதிய நோட்டுகள், 36 தங்கக் கட்டிகள் ஏற்கெனவே முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றின் மதிப்பு ரூ.68.5 கோடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரும்புகிறேன்... ஹேலி தாருவாலா!

கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் படத்தின் வெளியீட்டுத் தேதி!

ஒரு நாள்... அவந்திகா மிஸ்ர!

வியாழ உணர்வுகள்... அஞ்சு குரியன்!

யெஸ், லோகாதான்... கல்யாணி பிரியதர்ஷன்!

SCROLL FOR NEXT