மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர் கிரண்பேடி திகழ வேண்டும்: திருச்சி சிவா எம்.பி.
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர் கிரண்பேடி திகழ வேண்டும் என
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக ஆளுநர் கிரண்பேடி திகழ வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா எம்.பி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு மௌனமாக உள்ளது. மத்திய அரசின் கண் அசைவின்படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் இல்லை. அதிமுக பேரம் குறித்து ஆதாரத்துடன் பேச திமுகவிற்கு அனுமதி மறுத்து உள்ளனர். சபைக்குறிப்பில் இருந்து நீக்கி இருப்பதால் பணம் பேரம் உண்மை என்பது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
புதுச்சேரி ஆளுநர், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக தான் இருக்க வேண்டும். மோதல் போக்கை கைவிட வேண்டும் என்றார்