தமிழ்நாடு

திருப்பதியில் வழிப்பறி: 4 பேர் கைது; 200 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

DIN

திருப்பதி நகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 200 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து திருப்பதி எஸ்.பி. ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான திருச்சானூர், அலிபிரி, எம்.ஆர். பள்ளி, பலமநேரு, கங்கவரம், பீலேர், மதனபள்ளி, காஜுல மண்டலம், திருப்பதி கிழக்குக் காவல் நிலையப் பகுதிகளில் சங்கிலித் தொடர் போன்று நகை பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
வழிப்பறி நகை கொள்ளையர்களை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆந்திரத்தைச் சேர்ந்த சேக் முகமது காதர் (37), முஸ்லிம் (24), ஹரிபாபு (35) மற்றும் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சாதிக் இரானி (22) ஆகிய 4 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 202.75 சவரன் எடையுள்ள 48 தங்கச் சங்கிலிகள், இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் மொத்தம் 10 பேர் கொண்ட குழுவினர் இந்த நகை வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மகாராஷ்டிரத்தில் தலைமறைவாக இருக்கும் மற்ற 5 பேரை பிடிக்க தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர். இந்த 9 பேர் கொண்ட கும்பல் மீது திருப்பதி சுற்று வட்டார பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்தவர்களை திங்கட்கிழமை திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியாக அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT