தமிழ்நாடு

அரசு விமான ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்க ஒப்பந்தம்

DIN

தமிழக அரசின் சார்பில் விமான ஆம்புலன்ஸ் சேவையை விரைவில் தொடங்க ஒப்பந்தம் போடுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னையில் அப்பல்லோ விமான ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது: தானம் பெற்ற உடல் உறுப்புகள் பிற பகுதிகளில் இருந்து கொண்டு வருவதற்கு விமான சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நோயாளிகளைக் கையாளும் வகையில், தமிழக அரசின் சார்பில் வாடகை முறையில் விமான ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இடங்களைக் கண்டறியுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் விமான ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான விதிமுறைகளை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தால் அரசின் சார்பில் விமான ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT