தமிழ்நாடு

தொழில்துறையில் தமிழகம் கடைசி இடம்: மு.க.ஸ்டாலின் - அன்புமணி கண்டனம்

DIN

வேளாண், உற்பத்தி, தொழில் ஆகிய துறைகளில் தமிழகம் கடைசியிடத்துக்கு வந்துள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின்: 2016 }17 ஆம் ஆண்டில் 1.65 சதவீத வளர்ச்சியை மட்டுமே உற்பத்தி துறையில் தமிழகம் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தொழில் வளர்ச்சியில் வரலாறு காணாத அளவுக்கு 'மிகப்பெரிய வீழ்ச்சியை தமிழகம் சந்தித்திருப்பது தெளிவாகிறது. தொழில் துறையில் சரிவு ஏற்பட்டதற்கு 'நிலையில்லா ஆட்சியே காரணமாகும்.
உற்பத்தித் துறையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழில் துறையிலும் தமிழகம் பின்னுக்குப் போய், இளைஞர்களின் வேலை வாய்ப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் கோடி கடனில் இருக்கும் மாநிலத்தின் பொருளாதாரத்தையும், நிதி நிலைமையையும் மோசமடைய வைத்துள்ளது. இந்த நிலையில் ஆட்சியில் இருக்கப் போகும் எஞ்சிய நாள்களிலாவது தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுக்க வேண்டும்.
அன்புமணி: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள "இந்திய மாநிலங்களின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரக் கையேட்டில், 2016}17 ஆம் ஆண்டு, வேளாண்துறையில் மத்தியப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அம்மாநிலம் வேளாண் துறையில் வியக்கத்தக்க வகையில் 27.04 சதவீதம் வளர்ச்சியை ஈட்டியிருக்கிறது. தெலங்கானா 19.07 சதவீதமும், ஆந்திரம் 9.2 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மைனஸ் 8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த 2015}16 ஆம் ஆண்டில் மைனஸ் 3.5 சதவீதமாக இருந்த வேளாண்துறை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது என்பது வேதனை அளிக்கிறது.
உற்பத்தித் துறையில் தமிழகத்துக்குக் கடைசி இடமே கிடைத்துள்ளது. தொழில் துறையில் தமிழகத்தின் வளர்ச்சி சற்று அதிகமாக இருந்தாலும் கூட அதிலும் தமிழகத்துக்கு கடைசி இடமே கிடைத்துள்ளது.
அனைத்துத் துறைகளிலும் தமிழகம் பின்னடைவை சந்தித்து வருவதற்கு இரு முக்கியக் காரணங்கள் ஊழலும், நிர்வாகத் திறமையின்மையும் தான்.
வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்துவதன் மூலமே தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT