முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 40 இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை

நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையின் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

நெல்லை, மதுரை, சென்னை உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறையின் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரி சோதனை மத்திய பாதுகாப்புப் படை வீரர்களின் பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது செய்யது பீடி நிறுவனம். இதற்கு மதுரை, சென்னை போன்ற இடங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்நிறுவனம் முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் செய்யது பீடி நிறுவனத்திற்கு சொந்தமான வீடு உள்ளிட்ட 40 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையில், 20 வாகனங்களில் வந்த 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →