முகப்பு
தமிழ்நாடு

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினி

மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றுள்ளார்.
'காலா' படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கிருந்தபடியே அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார். அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஷங்கரின் '2.0', பா.ரஞ்ஜித் இயக்கி வரும் 'காலா' என சினிமாவிலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ரஜினி. தற்போது 'காலா' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்ள கடந்த 24 -ஆம் தேதி சென்னையிலிருந்து மும்பை சென்றார்.
இந்நிலையில், மும்பையிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிக்கு உடல் நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →