முதல்வர் எடப்பாடி பழனிசாமி - மத்திய அமைச்சர் ஜவடேகர் சந்திப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேரில் சந்தித்து பேசினார்.
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:38 PM
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேரில் சந்தித்து பேசினார்.
நிகழ்வு ஒன்றில் கலந்து கொளவதற்காக சென்னை வந்த மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய க்ரீன்வேஸ் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் பொழுது தமிழகத்துக்கு நீட் தேர்விலிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. முதல்வரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் ஜவடேகர் உறுதியளித்துள்ளார்.
Advertisement
இந்த சந்திப்பின் பொழுது தமிழக அமைச்சர்கள் உடனிருந்தனர்.