நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு!
சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.
சென்னை: சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.
சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நக்ஸ்லைட்டுகள் நேற்று கடுமையான துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 12 வீரர்கள் மரணமடைந்தனர். இவர்களில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரும் (36) ஒருவராவார். இவர் ஹவில்தாரராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் பலியான சங்கரின் குடும்பதிற்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சட்டீஸ்கரில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படுகிறது. அத்துடன் இந்த தொகையை விரைவில் அவரது குடும்பத்திடம் சேர்க்குமாறும் உத்தரவிடப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.