பேரவையில் ரகசிய வாக்கெடுப்பே நடந்ததில்லை: திமுகவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தமிழக சட்டப்பரவையில் ரகசிய வாக்கெடுப்பே நடந்தது இல்லை என்று திமுகவுக்கு அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார்.
தமிழ்நாடுபேரவையில் ரகசிய வாக்கெடுப்பே நடந்ததில்லை: திமுகவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தமிழக சட்டப்பரவையில் ரகசிய வாக்கெடுப்பே நடந்தது இல்லை என்று திமுகவுக்கு அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தமிழக சட்டப்பரவையில் ரகசிய வாக்கெடுப்பே நடந்தது இல்லை என்று திமுகவுக்கு அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் அவைத் தலைவரை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்துக்கு எதிராக அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் பேசியது:
தமிழக அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கடந்த மாதம் அவையில் கொண்டுவரப்பட்டபோது நடந்த நிகழ்ச்சிகளை மக்கள் கூர்ந்து கவனித்தனர்.
அன்று நாங்கள் அமைதி காத்தோம். புத்தகங்களை எடுத்து எங்கள் மீது வீசினீர்கள்; அப்போதும் நாங்கள் அமைதி காத்தோம். அவ்வாறு நாங்கள் அமைதி காத்ததை நாட்டு மக்கள் அன்று பார்த்தார்கள்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக, நீங்கள் முதலில் தேதியைத் தள்ளி வையுங்கள் என்றீர்கள். அதற்குப் பிறகு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றீர்கள். இந்த முறைகள் கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறதா?
கடந்த 1952 -இல் ராஜாஜி இருந்தபோதும், 1972 -இல் திமுக நம்பிக்கை வாக்கு பெற்றபோதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருக்கிறதா? 1988 -இல் அதிமுக நம்பிக்கை வாக்கு பெற்றபோதும், நீங்கள் கேட்ட முறை நடைபெற்றதா? என்பதை நீங்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.
பிற மாநிலங்கள்: உத்தரப் பிரதேசம் உள்பட பிற மாநிலங்களில் ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது குறித்துச் சொன்னீர்கள். உத்தரப் பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடந்தது என்பது அந்த மாநில மக்களுக்குத் தெரியும்.
தமிழகத்தைப் பொருத்தவரையில், பேரவைத் தலைவர் தனபால் தூய்மையோடு இந்த அவையை நடத்தியிருக்கிறார். இதை யாராலும் மறுக்கமுடியாது. ஐந்து ஆண்டுக் காலம், புனிதமாக இந்தப் பேரவையை நடத்திக் காட்டியிருக்கிறார்.
திமுகவைப் பொருத்தவரை, இந்த ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும்; இந்த ஆட்சி நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தோடு அன்றைக்கு நடந்து கொண்டீர்கள். அன்றைக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரவைத் தலைவரின் கையைப் பிடித்து இழுத்தீர்கள்; மைக்கை உடைத்தீர்கள். மேடையிலே ஏறி நீங்கள் நடனமாடியதையெல்லாம் இந்த நாடு பார்த்துக் கொண்டிருந்தது என்றார் செங்கோட்டையன்.