தமிழ்நாடு

சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தீர்மானம்: சட்டசபையில் ஸ்டாலின் முன்மொழிந்தார் 

DIN

சென்னை: சபாநாயகர் தனபாலுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று காலை முன்மொழிந்தார்.

தமிழக முதல்வாராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்  கொண்ட பிறகு அவரது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த மாதம் அவையில் நடைபெற்றது.அப்பொழுது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்கட்சியினரின் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார்.மேலும் அவையில் தர்ணாவில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர், பின்னர் நடந்த  நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக அரசு வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று திமுக  அறிவித்திருந்தது.அதன் அடிப்படையில் சபாநாயகர் தனபாலுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று காலை முன்மொழிந்தார்.

சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT