தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயார்: பேரவையில் அமைச்சர்கள் தகவல்

DIN

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராக இருப்பதாக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கூறினர்.
நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, 'உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என்று தெரியவில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும். எனவே, உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் குறுக்கிட்டுக் கூறியது: உள்ளாட்சித் தேர்தலை 6 மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்று விதி இல்லை. தொகுதியில் யாராவது உறுப்பினர்கள் இறந்துவிட்டால்தான் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடத்த வேண்டும்.
எனினும், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.174 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தேர்தல் தள்ளிப் போகிறது என்றார்.
மு.க.ஸ்டாலின்: அமைச்சர் அவைக்கு தவறான தகவலைத் தருகிறார். உள்ளாட்சித் தேர்தலை 5 ஆண்டுகளுக்குள் நடத்த வேண்டும் என்பது விதி. ஆனால், 5 ஆண்டுகள் முடிந்த பிறகு 6 மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் பஞ்சாயத்து ராஜ் சட்டம் தெரிவிக்கிறது.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு தயாராக இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால்தான் தேர்தல் தள்ளிப் போனது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT