முகப்பு
தமிழ்நாடு

மாற்றத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாற்றத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:19 AM
பகிர்:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாற்றத்துக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர் என சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், திமுக எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷை ஆதரித்து மா.சுப்பிரமணியன், தண்டையார்பேட்டை பகுதியில் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அப்போது அவர் பேசியது:
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகுந்த குழப்பம் நீடிக்கிறது. திமுக ஆட்சியில் ஏராளமான மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் முக்கியத் திட்டங்கள்கூட கிடப்பில் போட்டப்பட்டுவிட்டன. இதுகுறித்து மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர். எனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாற்றத்துக்கு வாக்களித்து, திமுகவை வெற்றியடையச் செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் மா.சுப்பிரமணியன்.

முழு கட்டுரையைப் படிக்க →