முகப்பு
புதுகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகிறார், திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்கும்: மு.க.ஸ்டாலின் உறுதி

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவளிக்கும் என்றார் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:21 AM
புதுகையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகிறார், திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
பகிர்:

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவளிக்கும் என்றார் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின்.
புதுகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என சட்டப்பேரவையில் முதல்வர் உறுதிபடக் கூறினார். சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென நாங்கள் வலியுறுத்தினோம். அதற்கு முதல்வர் பதிலளிக்கவில்லை. இந்தச் சூழலில், மத்திய அரசால் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது வேதனைக்குரியது. இந்நிலையில், மத்திய அரசு தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையின் விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக அரசு இதுவரையில் வெளியிடவில்லை. இதன் மூலம், தமிழக அரசு இத்திட்டத்துக்கு மறைமுக ஆதரவளிப்பதாகவே உணர முடிகிறது.
மத்திய அரசு, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் அளித்த உறுதிக்கு மாறாக ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது.
தில்லியில் கடந்த பல நாட்களாகப் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் குறித்த தமிழக பாஜகவினர் வெளியிட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கது. ஆளும்கட்சி எம்.பி.க்கள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்திக்கவில்லை. ஆனால், திமுக எம்.பி சிவா, விவசாயிகளை அழைத்துப் பேசி மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்க வைத்தார்.
கடந்த காலங்களைப் போல ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு திமுக முழு ஆதரவளிக்கும் என்றார் மு.க. ஸ்டாலின்.
இதில், முன்னாள் அமைச்சர், திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ- கே.என்.நேரு, எம்எல்ஏ-க்கள் திருமயம் எஸ். ரகுபதி, புதுகை பெரியண்ணன் அரசு, ஆலங்குடி சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் எம்எல்ஏ- ரா.சு. கவிதைப்பித்தன், நிர்வாகிகள் கவிஞர்காசிமுத்துமாணிக்கம், சி. முத்துச்சாமி, க.நைனாமுகமது, த. சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →