முகப்பு
தமிழ்நாடு

ஆளுநர் திரும்ப அழைக்கும் தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்ற வேண்டும்: அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் வலியுறுத்தல்

மாநில வளர்ச்சிக்கு எதிராகவும், அதிகாரிகள் மத்தியில் கோஷ்டியை உருவாக்கியும், இணை அரசாங்கம் நடத்தும் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:10 PM
பகிர்:

மாநில வளர்ச்சிக்கு எதிராகவும், அதிகாரிகள் மத்தியில் கோஷ்டியை உருவாக்கியும், இணை அரசாங்கம் நடத்தும் துணைநிலை ஆளுநரை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீர்மனத்தை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

எம்.எல்.ஏ. பாஸ்கர் மீது நகராட்சி ஆணையர் அளித்த புகார் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து அன்பழகன் பேசியதாவது:
அரசு அதிகாரிகள் மத்தியில் தனக்கு ஒரு குழுவை உருவாக்கி ஆளுநர் செயல்படுகிறார். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார். புதுவையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய ஆளுநர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். இணைப்பு பாலமாக விளங்காமல் சூப்பர் முதல்வர் போல் செயல்படுகிறார்.

அவரது செயல்பாடு அவ்வாறு உள்ளது. அரசுக்கு நல்ல ஆலோசகராக அவர் செயல்படவேண்டும். நிர்வாகத்தையே அவர் கையில் எடுத்துக் கொண்டுள்ளதால், மாநில ஆட்சிமுறை சீர்குலைந்துவிட்டது. அவர் வரும்போது எம்.எல்.ஏக்களை அழைப்பதில்லை. 

முதலியார்பேட்டை சுதானா நகரில் ஆளுநர் அறிவுறுத்தல் பேரில் நகராட்சி ஆணையர் சுயஉதவிக்குழுக்களை கூட்டி பேசியுள்ளார். அதற்கு எம்.எல்.ஏ பாஸ்கரன் ஆட்சேபனை தெரிவித்தபோது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை வைத்து ஆணையர் எம்.எல்.ஏ பாஸ்கர் மீது பொய்ப் புகார் அளித்துள்ளார். எம்.எல்.ஏவை அவமதிக்கும் வகையில் ஆணையர் செயல்படுகிறார். இதைக் கண்டித்து தான் உரிமை மீறல் பிரச்னை தரப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட அமைச்சரையும் அவமதிக்கும் செயலில் ஆளுநர் ஈடுபட்டு வருகிறார். கட்டுரை வலைப்பதிவில் அமைச்சர்களையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். தில்லியில் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் ஆளுநராக உள்ளார். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். சட்டத்தை மீறி பல்வேறு செயல்பாடுகளில் ஆளுநர் செய்து வருகிறார். அமைச்சரவை முடிவுக்கு தான் ஆளுநர் கட்டுப்பட வேண்டும்.

உப்பளம் தொகுதியில் துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணியில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் தந்துள்ளனர். பணிகளும் தாமதமாக நடந்துள்ளன. தூர்வாரும் நிறுவனத்துக்கும் ஆளுநருக்கும் என தொடர்பு. 

பல சூழ்நிலைகளில் ஆளுநரின் செயல்பாடு சரியாக இல்லை. இணை அரசை நடத்தி வருகிறார். சிறப்பு அதிகாரி பொறுப்புக்கு ரூ.1 லட்சம் ஊதியம் தரப்படுகிறது. அப்பதவிக்கு புதுவையில் எவரும் இல்லையா. உரிமை மீறல் பிரச்னை தந்த பின், ஆளுநர் தூண்டுதலின் பேரில் நகராட்சி ஆணையர் காவல்துறையில் பாஸ்கர் எம்.எல்.ஏ. மீது புகார் தருகிறார்.

மலிவு விளம்பரம் தேடும் வகையில் ஆளுநர் செயல்படுகிறார். பல குற்றச்சாட்டுகளை நான் கூறுவேன். துணைநிலை ஆளுநர் மாளிகையில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடக்கின்றன. ஆணையர் புகார் அளித்து விட்டு, தனக்கு பிசிஎஸ் அதிகாரிகள் ஆதரவு உள்ளதாக கூறுகிறார். 

துணைநிலை ஆளுநர் பேச்சைக் கேட்டு புகார் அளித்த ஆணையர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஜிபியை அழைத்து எம்.எல்.ஏவை கைது செய்யும்படி எவ்வாறு ஆளுநர் கூறலாம்.

மாநில வளர்ச்சிக்கு தடையாகவும், அதிகாரிகள் மத்தியில் கோஷ்டியை உருவாக்கு செயல்படும ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →