குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு
மக்கள் மன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தால் தான் ஆட்சி அமைப்போம்; குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம் என்றார் திமுக
தமிழ்நாடுகுறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு
மக்கள் மன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தால் தான் ஆட்சி அமைப்போம்; குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம் என்றார் திமுக
அறந்தாங்கி: மக்கள் மன்றத்தில் பெரும்பான்மை கிடைத்தால் தான் ஆட்சி அமைப்போம்; குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க மாட்டோம் என்றார் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின்.
அறந்தாங்கி தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவும், ஆவுடையார்கோவில் ஒன்றியச் செயலருமான உதயம் சண்முகத்தின் மகனும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான உதயம் சரண், எம்.ஆர். குணசுந்தரியின் திருமணத்தை நடத்தி வைத்த பின்னர், ஸ்டாலின் பேசியது:
உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாமல் ஆளும் கட்சி திணறிக் கொண்டிருக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளுக்கு டெபாசிட் கிடைக்காது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தொடர்ந்து, விரைவில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்படும். ஆனால், மக்களின் தீர்ப்புக்கு திமுக கட்டுப்படும்.
75 நாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணப் படுக்கையில் இருந்தபோதும் நாங்கள் கண்ணியத்துடன் நடந்து கொண்டோம். அவரை கொள்கை ரீதியில் மட்டுமே எதிர்த்தோம். தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசவில்லை. ஆனால், முதல்வராக இருக்கும் வரையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் எழவில்லை. முதல்வர் பதவி போன பின்னர் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து முதல்வர் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்கிறார்.
எங்களுக்கு குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. மக்கள் மன்றத்தில் பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்த பிறகே திமுக ஆட்சி அமைக்கும். திமுக தமிழர்களுக்காக என்றைக்கும் குரல் கொடுக்கும் என்றார்.