தமிழ்நாடு

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை எப்பொழுது முடியும்? சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

DIN

புதுதில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணை எப்பொழுது முடியும் என்று சி.பி.ஐயிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கி ல் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். இவர் இந்த வழக்கில் சி.பி.ஐ தலைமையிலான விசாரணைக் குழுவின் விசாரணை எப்பொழுது முடியுமென்று கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இன்று நீதின்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது நீதிமன்றமானது சி.பி.ஐயிடம் ராஜிவ் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை எப்பொழுது முடியும்? சி.பி.ஐ தலைமையில் உருவாக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை குழுவிவின் தற்பொழுதைய நிலை என்ன? என்று கேள்வி எழுப்பியது. அத்துடன் இது தொடர்பாக நான்கு வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சி.பி.ஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்பொழுது சி,.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் வெளிநாட்டில்  உள்ளவர்களுக்கும் தொடர்பு இருப்பதால் அவர்களை விசாரிக்க தாமதம் ஆகிறது என்று தெரிவித்தார். அத்துடன் நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுமென்றும் உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கானது ஆகஸ்ட் மாதம் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT