தமிழ்நாடு

மருத்துவ மாணவர்கள் போராட்டத்தினை முடிக்க 'எஸ்மா' சட்டம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை!

DIN

சென்னை: தொடர்ந்து 17-ஆவது நாளாக நடந்து வரும் அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் போராட்டத்தினை முடிவுக்குக்கொண்டு வர, தேவைப்பட்டால் 'எஸ்மா' சட்டத்தினை பயன்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி அரசு மருத்துவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை நடத்து வருகின்றனர். இன்று 17 -ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில், அரசு மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அறுவைச் சிகிச்சைகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்ட மருத்துவ சேவைகள், மருத்துவ முகாம்கள், முக்கிய நபர்களுக்கான மருத்துவக் குழு, மாணவர்களுக்கான வகுப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவ மாணவர்கள் வியாழக்கிழமை கல்லூரி பகுதியில் பேரணியாகச் சென்றனர். தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 16 -ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டு நடந்து வருகிறது.இந்த வழக்கின் தீர்ப்பு அரசு மருத்துவர்களுக்குச் சாதமாகனதாக அமையவில்லை என்றால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

இன்றும் வெள்ளிக்கிழமை (மே 5), சனிக்கிழமை (மே 6) ஆகிய நாள்களில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் இன்று உயர் நீதின்றத்தில் ஆஜரானார்.அப்பொழுது நீதிபதிகள் தெரிவித்ததாவது:

அரசு மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் போராட்டத்தினை முடிவுக்குக்கொண்டு வர, தேவைப்பட்டால் 'எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு ட்டத்தினை பயன்படுத்தலாம்.

முதலில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு மற்றொரு முறை அவகாசம் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்துங்கள். பேச்சு வார்த்தையில்  ஒத்து வராவிட்டால் 'எஸ்மா' எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தினை பயன்படுத்தலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக நீதின்றத்தில் வழக்கு  நடந்து கொண்டிருக்கும் போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது நீதி அமைப்பில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது. அத்துடன் மருத்துவர்கள் என்பவர்களும் தொழிலாளர்கள்தான். கடவுள் ஒன்றும் இல்லை.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு அவகாசம் அளித்தது வழக்கை இரண்டு வாரங்களுக்குக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோர்ட்டில் ஆஜர் ஆகி விட்டு, வெளியில் வந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்தை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பொதுமக்களுக்கான அத்தியாவசிய மருத்துவ சேவைகள் எதுவும் பாதிக்கப்படமால் பார்த்துக்கொள்கிறோம் என்று நீதிமன்றத்திடம் தெரிவித்ததாக கூறினார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT