தமிழ்நாடு

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பத்திரப்பதிவு: மீண்டும் தடையை தளர்த்திய உயர்நீதிமன்றம்!

DIN

சென்னை: அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடைஉத்தரவை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விளை நிலங்களை வீ ட்டுமனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்வதற்கு தடை உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் 'யானை' ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் முன்னரே சில உத்தர வுகளை நீதிமன்றம் தமிழக அரசுக்கு பிறப்பித்திருந்த நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு தெரிவித்ததாவது:

அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை வரன்முறை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவின் படி தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணைகளின் கீழ் பத்திரப்பதிவு செய்யலாம்.  ஏற்கனவே வீட்டு மனைகளாக பதிவு செய்யப்பட்ட நிலங்களை மறுபதிவு செய்யலாம் என்ற சட்டத்தின் கீழும் பத்திரப்பதிவு செய்யலாம்.

மேலும் 21.04.2017 முதல் இன்று வரை பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைப் பதிவுகள் சட்டவிரோதம் ஆகும்.  அத்துடன் 09.09.206 முதல் 28.03.2017 இடையிலான அனைத்து பத்திரப்பதிவுகளும் சட்டவிரோதமே ஆகும். . இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு வரும் வரை பத்திர பதிவுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டதாகும்.

இதன் அடிப்படையில் பத்திரவு பதிவு செய்தவற்கான தடை தளர்த்தப்படுகிறது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூன் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT