முகப்பு
தமிழ்நாடு

டிடிவி தினகரனுக்கு 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:31 PM
பகிர்:

புதுதில்லி: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக (அம்மா) கட்சி துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரன் இருவரின் நீதிமன்ற காவலை வரும் 29 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் குரல் பதிவை ஆய்வு செய்ய அனுமதி கோரி தில்லி காவல்துறை மனு தாக்கல் செய்தது. மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் வழக்குரைஞர்கள் தில்லி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →