தமிழ்நாடு

கருணாநிதி சட்டப்பேரவை வைர விழா: ராகுல் காந்தி - சீதாராம் யெச்சூரி பங்கேற்பு

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

DIN

திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஜூன் 3-ஆம் தேதி மாலை... கருணாநிதியின் 60 ஆண்டு கால சட்டப்பேரவை வைரவிழா மற்றும் 94-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இரண்டையும் இணைத்து திமுக சார்பில் மாபெரும் விழாவாக நடத்த உள்ளோம். ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜூன் 3-ஆம் தேதி மாலை 5 மணியளவில் விழா நடைபெறும்.
தலைவர்கள் யார், யார்? அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத்தலைவர் டெரிக் ஓ பிரைன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மருத்துவர்கள் அனுமதித்தால் கருணாநிதி விழாவில் பங்கேற்பார்.
அரசியல் விழா இல்லை: அகில இந்திய அளவிலான தலைவர்கள் பங்கேற்பதால், குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று சொல்ல முடியாது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பாக சோனியா
காந்தி ஏற்கெனவே தொலைபேசி வாயிலாகப் பேசியுள்ளார். இது தொடர்பாக மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் பேசியுள்ளனர். அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்த பிறகுதான் பொது வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது நடைபெற உள்ளது கருணாநிதிக்கான விழா.
பேரவைக் கூட்டம்: மானியக் கோரிக்கை மீது விவாதம் நடத்துவதற்காக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என்று முறையாக கடிதம் கொடுத்துள்ளோம். ஆனால், எந்தவித பதிலும் வரவில்லை. சட்டப்பேரவையைக் கூட்டினால் மெஜாரிட்டி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வால் கூட்டத்தைக் கூட்டத் தயங்குகின்றனர். அதனால்தான் போட்டி போட்டுக் கொண்டு சென்று பிரதமரைச் சந்திக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

சிறுமி தற்கொலை

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் ஈஷா சிங்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இந்தியா முதல்முறையாக குவாலிஃபயா்ஸுக்கு தகுதி!

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன்: இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை!

SCROLL FOR NEXT