தமிழ்நாடு

சென்னைவாழ் அசைவப் பிரியர்களுக்கான செய்தி: ஆன்லைன் மூலம் மீன் விற்பனை துவக்கம்

DIN


சாந்தோம்: சென்னை வாழ் அசைவப் பிரியர்களுக்கு, இனி ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சென்னையில் உள்ளவர்கள் இனி ஆன்லைன் மூலமாகவே மீன் வாங்கலாம்.  ஆன்லைன் மீன் விற்பனைக்காக 10 லட்சத்தில் மென்பொருள் உருவாக்கப்பட உள்ளது. 

தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தில், ஆன்லைன் மூலமாக குறைந்தபட்சம் ரூ.500க்கு மீன் வாங்க வேண்டும். சென்னையில் வீடுதேடி வந்து மீனைக் கொடுக்க போக்குவரத்து செலவுக்காக ரூ.35 வசூலிக்கப்படும். 

இந்த திட்டத்துக்கு தமிழக மீனவர்களிடம் இருந்துதான் மீன்கள் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT